குவைத்தில் இன்று காலையில் 8 கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.
குவைத் மத்திய சிறையில் கொலைக் குற்றவாளிகள் 8 பேருக்கு இன்று(19/01/25] ஞாயிற்றுக்கிழமை காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றபட்டது. கிரிமினல் மேல்முறையீடு நீதிமன்றம் மற்றும் வழக்கு நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகள் மற்றும் தண்டனை நிறைவேற்றப்பட தேவையான ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பிறகே மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.
குற்றவாளிகளில் ஆறு பேர் குவைத் குடிமக்கள்(5 ஆண்கள் மற்றும் 1 பெண்), ஒரு எகிப்து நாட்டவர் மற்றும் ஒரு பிதூனி உள்ளிட்ட 8 பேர் அடங்குவர் என்று அதிகாரிகள் வெளிப்படுத்தினர். உள்துறை அமைச்சகம், சீர்திருத்த துறை, குற்றவியல் சான்றுகள் வழங்கும் துறை, குற்றவியல் மரணதண்டனை வழக்கு மற்றும் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, மரணதண்டனைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடித்துள்ளனர்.
மேலும் தண்டனை நிறைவேற்றப்படும் போது முறையான நெறிமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு குழு மருத்துவர்களால் இந்த செயல்முறை அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்படும் முதல் தூக்குத்தண்டனை இதுவாகும்
Tags : குவைத்தில் இன்று 8 கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.