வேலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ராஜினாமா.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் இன்று நடைபெற்று வருகின்றது என் தொடர்ச்சியாக இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் சில மாவட்டங்களில் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமாக்கள் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் மையக்குழு தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, ஜெகநாதன், மகேஷ் குமார், மாவட்ட பொருளாளர் தீபக் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
Tags : வேலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ராஜினாமா.