கேரளம் என பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலையாள மொழியில் கேரளம் என்று அழைக்கப்படுவது அனைத்து மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட வேண்டும் என கேரளா சட்டசபையில் ஜூன் 24 2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து குடியரசு தலைவர் கேரளா யசோதா 2026ஐ கேரளா சட்டப்பேரவையின் கருத்தை கேட்க அனுப்பி வைப்பார். இதன்பின் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் கேரளா என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாற்றப்படும். கேரளம் என்பது மலையாள மொழியில் கேரம் தென்னைகள் நிரம்பிய மற்றும் அளம் என்றால் நிலம் என்றும் தென்னை மரங்கள் நிறைந்த நிலம் என்ற பொருளில் இப்பெயர் உருவானதாக சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு பின் அரசு ஆவணங்கள், வரைபடங்கள், பாட புத்தகங்கள் அனைத்திலும் கேரளம் என்ற பெயரே இடம் பெறும்.
Tags :


















