இரவுநேர ஊரடங்கு: அரசு விரைவுப் பேருந்துகளை பகலில்  இயக்க உத்தரவு 

by Editor / 19-04-2021 03:58:13pm
இரவுநேர ஊரடங்கு: அரசு விரைவுப் பேருந்துகளை பகலில்  இயக்க உத்தரவு 

 

 அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவுநேர ஊரடங்கின்போது வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் (இரவு 10 மணி முதல் காலை 4மணி வரை) செயல்பட அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவுப் பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் மாற்று பயண தேதிக்கு பதில் பேருந்து முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via