மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் லிப்டில் சிக்கிக் கொண்டு தவிப்பு

by Staff / 29-10-2022 03:28:33pm
 மருத்துவக் கல்லூரி  ஊழியர்கள் லிப்டில்  சிக்கிக் கொண்டு தவிப்பு

தூத்துக்குடி காமராஜ் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. மாடியில் மருத்துவ பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறதுஇந்த மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு செல்ல லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த லிப்ட் அவ்வப்போது பழுதாகும் என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று லேப் டெக்னீசியன் முத்துமாரி, ஆரோக்கிய செல்வ மேரி ஆகிய இருவரும் லிப்டில் சென்றனர் அப்போது லிப்ட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைவெளியில் நின்றது.இதனால் இருவரும் உயிருக்கு போராடினர்.

இது தொடர்ந்து மருத்துவமனை கல்லூரியில் உள்ள ஊழியர்கள் அவரை மீட்க சுமார் ஒரு மணி நேரம் போராடியும் பலனளிக்காமல் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு படையினர் 15 நிமிடத்தில் இருவரையும் பத்திரமாக உயிருடன் மீட்டர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories