தனியார் மனமகிழ் மன்றத்திற்கு சீல் வைப்பு

மதுரை திடீர்நகர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள பணச்செல்வம் என்பவருக்கு சொந்தமான தனியார் மனமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு அனுமதிக்கப்படாத நேரத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு மொத்தம் 6228 மதுப்பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனமகிழ் மன்றத்தின் மேலாளர் மகாராஜன், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போன்று செங்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் இயங்கி வந்த குறிஞ்சி மணமகிழ் மன்றத்தை புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் அசோக், மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் அதிரடியாக சோதனை செய்தனர், உள்ளே உள்ள மதுபானக்கூடத்தை சோதனை செய்தபோது அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவான 1000 யூனிட்டுக்கு மேல் 500 யூனிட் அதிகமாக இருந்ததால் மதுபானக் கூடத்தை பூட்டி சீல் வைத்தனர். இது சம்பந்தமாக செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :