மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்1008 சங்காபிஷேகம்

: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்1008 சங்காபிஷேகம்
சோமவாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சோமவாரத்தையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு யாகம் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Tags :