கென்யாவில்  - திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 

by Admin / 07-12-2021 12:23:26am
கென்யாவில்  - திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 

கென்யாவில்  - திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 

கென்யா, தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர்  பஸ்சில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர்.
 
அங்கு கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை பஸ் கடந்து செல்ல முயற்சித்தது. அப்போது அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக கூறுகின்றன.
 
அவர்களில் 4 பேர் குழந்தைகள். 12 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர் விபத்தில் பலியானவர்களுக்கு  மாகாண கவர்னர் நகிலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via