ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளதின்படி, தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முகல்வர் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகரன் சதீஷ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையராக உள்ள வைத்தியநாதனை தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags : ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.