காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

by Editor / 11-04-2023 03:43:39pm
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி நடந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவின் தேரோட்டத்தின் போது  தேரோடும் வீதியின் நடுவில் காவல்துறை வாகனத்தை நிறுத்திய சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீரை கண்டித்தும் தேரை இழுத்து வந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்ததை கண்டித்தும் சிவகிரி பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டத் திருவிழா கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்றது குறிப்பிட்ட ஒரு  பகுதியில் தேரை நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் ஒரு பகுதியில் உள்ள மண்டபத்தின் அருகே தேரை நிறுத்துவதற்க்காக  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தேர் வரும் வழியில் நடுவீதியில் காவல்துறையின் வாகனத்தை நிறுத்தினார் இதனால் அவ்வழியே வேகமாக வந்த தேர் காவல்துறை வாகனத்தின் மீது மோதியது. இதில் காவல் துறை வாகனம் சேதமடைந்தது டிஎஸ்பி வாகனத்தின் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல் பட்டதால் பெரும் உயிர் சேதங்கள் இன்றி அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. தேரோடும் நடுவீதியில் வாகனத்தை மறித்து நிறுத்திய டி எஸ் பி யின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தேரை இழுத்து வந்தவர்கள் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்ததாக கூறி  சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீரை கண்டித்தும் இன்று காலை சுமார் 1000-க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.மேலும் தேரோட்டத்தின் போது  திருவிழா தேரை இழுத்துச் சென்ற 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் மற்றும் புளியங்குடி டிஎஸ்பி அசோக் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக பொதுமக்களின் இந்த ஆர்ப்பாட்டம் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நடைபெற்றதால் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதால் பொதுமக்களும் பயணிகளும் அவதி அடைந்தனர்,பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப்பின்னர் காவல்துறையினரால் பிடித்து செல்லப்பாட்ட நபர்களை விடுவித்து விடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
 

Tags :

Share via