ரேஷன் அரிசி கடத்திய 132-பேர் குண்டர் சட்டத்தில் கைது: ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

by Staff / 28-01-2023 01:56:03pm
ரேஷன் அரிசி கடத்திய 132-பேர் குண்டர் சட்டத்தில் கைது: ஆணையர்  டாக்டர் ராதாகிருஷ்ணன்

 திருப்பரங்குன்றம் உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது கூட்டுறவு துறை மூலம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி தாண்டி கடன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் 14, 84, 000 விவசாயிகளுக்கு ஒரு 10. 892 கோடி கடன் வழங்க வாய்ப்பு கிடைத்தது. ஜனவரி பிப்ரவரி மார்ச் சம்பா சீசன் வருகிறது 3, 594 நேரடி கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 1, 367 நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 19, 000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது அடுத்த சில நாட்களில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கிறோம் ரேஷன் கடைகளை புதுப்பிக்க முதலமைச்சர் கூறியுள்ளார். 10 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன். அதில் 25 ஆயிரம் நிறைந்த கடைகளும் 10, 000 பகுதி நேர கடைகளாகவும் செயல்பட்டு வருகிறது. நம்ம ஊர் நம்ம ரேஷன் கடை திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்தில் இருந்து 4, 845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தமிழகத்தில் கல்முனை ஆக்கப்பட்டுள்ளதால் தான் ரேஷன் அரிசி கடத்தல் என்ற செய்தி வருகிறது இதுவரை ரேஷன் அரிசி கடத்திய 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 13, 000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு குடோனிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் கேமரா வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ரேஷன் கடைகளில் பெரும்பாலும் தரமான அரிசி வழங்கப்படுகிறது பொங்கலுக்கு கூட நல்ல அரிசி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் குற்றச்சாட்டு வந்தால் உரிய பொருளை திருப்பி அனுப்புங்கள் தரமான நல்ல அரிசி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo