அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகின்றனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அரசியல் செய்யும் நோக்கத்துடன் மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'விவசாயிகளுக்கும், மக்களுக்கு நன்மை தர வேண்டும் என்பதற்காக நமது உணர்வினை மத்திய அரசுக்கு தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதை அரசியலாக பார்க்கின்றனர். அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகின்றனர். நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் சொல்கின்ற வார்த்தைகள் கூட மென்மையாக இல்லை, அதில் ஒரு அனுதாபம் கூட இல்லை. அதைத்தான் மக்கள் வேதனையாக பார்க்கின்றனர்' என தெரிவித்தார்.
Tags :