2026 தேர்தலை கருத்தில் கொண்டு களமிறங்கும் கட்சிகள்
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காட்சிகள் இப்போதே காய்களை நகர்த்தவும் கட்சியை பலபபடுத்தவும் தொடங்கிவிட்டனர்.திமுக சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்களைநியமித்து புத்தகமிட்டி பாகமுகவர்கள் ஆலோசனைக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த தொடங்கிவிட்டது.அதிமுகவும் தேர்தலுக்காக ஆய்வுக்குழுவை அமைத்து தொகுதிவாரியாக கருத்துக்களை கேட்க களமிறங்கியுள்ளது.இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் கட்சியின்மாநாட்டால் பல்வேறு கட்சிகள் சிறு அதிர்வுகளை கண்டுள்ளன.இந்தநிலையில் சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விசிகவில் கோட்டம் என்கிற அடிப்படையில் இல்லாமல், சட்டமன்றத்தொகுதி அடிப்படையில் நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் முயற்சியாக 234 தொகுதிகளையும் 234 தொகுதி மாவட்டங்களாக அறிவிக்க இருப்பதாகவும்,கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags : 2026 தேர்தலை கருத்தில் கொண்டு களமிறங்கும் கட்சிகள்