தமிழர் அல்லாதவர் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம்-சீமான் பேட்டி:

by Staff / 19-10-2025 09:44:17am
தமிழர் அல்லாதவர் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம்-சீமான் பேட்டி:

 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எங்களுடைய வன காவலர் நாட்டைக் காத்த கருப்புசாமி எல்லை காத்த அய்யனார் போற்றுதலுக்குரிய பெருமகனார் வீரப்பனார் அவர்களுடைய நினைவை போற்றுகின்ற நாள் இன்று. அவர் அவர் இருக்கும் வரை எங்களுடைய காடு காடாக இருந்தது. எங்களுடைய எல்லைகள் எங்களுக்கானதாக இருந்தது.  அவர் காட்டை அழித்தார் என்று குற்றம் சாட்டினார்கள் ஆனால் இன்று காட்டை அழித்துக் கொண்டிருப்பது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் மேல் சந்தன கட்டை வெட்டினார் யானைகளைக் கொன்று தந்தம் கடத்தினார் என்ற குற்றம் சாட்டினார்கள் விற்றவர் காட்டுக்குள் இருந்தார் வாங்கியவர் நாட்டுக்குள் தானே இருந்தார் ஏன் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. வீரப்பன் திருடன் என்றால் ஜெயலலிதா கருணாநிதி யார் என்று கேட்டேன் யாரிடமும் பதில் இல்லை.

தமிழர் என்று எவன் நிமிர்ந்து நிற்கிறானோ வீரத்தின் எழுச்சி குறியீடாக எழுகிறானோ அவர்களை எல்லாம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் திருடன் என்று பழி சுமத்தி ஒழிப்பது தான் இந்திய திராவிட அரசுகளின் தொடர் வேலை. அப்படித்தான் இவர்கள் எங்கள் தலைவரை பழி சுமத்தி அழித்தார்கள். தொடர்ச்சியாக பேசிப் பேசி திட்டமிட்டு தமிழர்களுக்கு தன்மான உணர்வு இனமான உணர்வு வந்து விடக்கூடாது வீரத்தை போற்றினால் தமிழன் நிமிர்ந்து விடுவான் அதனால் அந்த வீரத்தின் குறியீடுகளுக்கு சுவரொட்டி ஒட்ட கூடாது கூட்டம் போட்டு பேசக்கூடாது என்று தடைகளை விதித்து விதித்து அவர்களின் அடையாளங்களை மறைப்பது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது இன்றைக்குதமிழ் பிள்ளைகள் தங்கள் முன்னோர்களின் வேர்களை தேடிச் சென்று இவையெல்லாம் எங்களுடைய வீரம் காத்த அறம் சார்ந்த அடையாளங்கள் என்று கண்டெடுத்து வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றோம். அதில் பெருமைக்குரிய ஒன்றுதான் வீரப்பனார் அவர்கள் அவரது நினைவிடத்தில் நின்று போற்றுவது அவருடைய கனவை சுமந்து எங்களுடைய பயணத்தை தொடர்கின்றோம் நாங்கள் வென்று வந்து இதே இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்டி அவருடைய சிலையை நிறுவி தொடர்ந்து போற்றுவோம். எங்கள் முன்னோர்களை எல்லாம் திட்டமிட்டு  வீரங்கள் விதைத்த இடம் தெரியாமல் வீசப்படுகிறது ஆனால் வீரியமிக்க அந்த விதைகள் வீர மறவர்களாக மரத்தமிழர் மடியிலே முளைத்து வருகிறோம் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் நாங்கள் விழுவோம் எழுவோம் விடுதலையாகி வருவோம் அந்த உறுதியை ஏற்று எங்கள் ஐயாவுக்கு வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்.

ஈழ விடுதலைக்கு போராடி செத்த மாவீரனுக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை இங்கு எல்லா கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயர் வைக்கிறார்கள் தமிழர்களின் அடையாளங்களை மறைத்தால்தான் திராவிடர்கள் இந்தியர்கள் இவை தமிழர்களின் அடையாளத்தை மறைக்கும் பெயர்கள்தான். வீரப்பனாரை அதிமுக அரசுதான் கொன்றது என்று அப்போது கூறினார்கள் இப்போது அதிமுகவினர் யாருக்கேனும் அந்த தைரியம் உள்ளதா துணிச்சல் இருந்தால் கூறட்டும் பார்ப்போம்

என்னையும் பயங்கரவாதி தீவிரவாதி என்று கூறிகின்றார். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது என் கையில் அது இல்லை அதனால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் வாக்கு வைத்திருக்கிறேன் அதனால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை வீரப்பனாருக்குநினைவிடத்தை இதுவரை கட்ட அனுமதிக்கவில்லை அவர்கள் கட்டினாலும் நான் இடித்து கட்டுவேன் எனது பெயரை வைப்பேன் அதற்காக தான் விட்டு வைத்துள்ளனர் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் அடிக்கடி பேசி வருகின்றனர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் ஒரு பொருட்டே கிடையாது மனித உயிராகவே மதிப்பதில்லை குஜராத் மீனவரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்ய போது இந்திய கடற்படை விரைந்து சென்று மீட்டு வந்தது ஆனால் தமிழகமீனவர்கள் கைது செய்யும் போது இந்திய கடற்படை நிற்கவில்லை ஏன் தமிழர்கள் ஒரு பொருட்டு அல்ல 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளனர் அவர்கள் பேசி கச்சத்தீவை திரும்பப் பெறலாம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்து நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து பேரணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை காவிரியை மீட்க ஒரு மாநாடு ஒரு பேரணி நடத்தி வலியுறுத்த முடியாதா கட்ச தீவை கொடுக்கும்போது என்ன செய்தீர்கள்? இமெயில் இன்டர்நெட் காலத்தில் கடிதம் எழுதிக் கொண்டு உள்ளார்கள் உண்மையான திராவிடம் என்றால் என்ன என்பது இவர்களுக்கு தெரியுமா நான் கூறுகிறேன் திராவிடம் என்றால் தமிழர் அல்லாதவர் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டது தான் திராவிடம்.சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஆறு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பட்டியலாய் மேடையில் அறிவித்தார்.

 

Tags : தமிழர் அல்லாதவர் வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்டதே திராவிடம்-சீமான் பேட்டி:

Share via