பாலியல் வன்கொடுமை வழக்கு 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் என்கிறவன் சரவணன் மாடசாமி பிரவீன் ஜீனத் அகமது மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் 8 பேரில் நான்கு பள்ளி சிறுவர்கள் மட்டும் ஜாமீனில் விடப்பட்டனர். ஹரிஹரன் பிரவீன் ஜீனத் அகமது மாடசாமி ஆகியோர் இதில் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அவர் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்
Tags :



















