திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் கோரிக்கை.

தமிழ் கடவுள் ஆன முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில்பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி காலையில் சாமி தரிசனம் செய்வது சில மாதங்களாக வழக்கமாகி வருகிறது,
அந்த வகையில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கடற்கரையில் தங்கியவுடன் அங்கு நெய்விளக்கு ஏற்றி வழிபாடும் செய்தனர்.
பின்னர் இன்று காலை கடலில் புனித நீராடி சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசைகள் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடியதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு இருந்தது.
இருப்பினும் இன்று காலை சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிய பக்தர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அதிகமாக இருந்தது. எனவே பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் கோரிக்கை