காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர்

by Staff / 17-04-2023 12:30:45pm
காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜெகதீஸ் ஷெட்டர், நேற்று அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், இன்று காங்கிரஸில் இணைந்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை தனக்கு வாய்ப்பளிக்காததால் அதிருப்தியில் இருந்து ஜெகதீஸ் ஷெட்டர், கட்சியிலிருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில், தன்னை காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஸ் ஷெட்டர் இணைத்துக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo