பறவை காய்ச்சல் எதிரொலி-மாநில எல்லையில் மருந்து தெளிப்பு

by Staff / 03-11-2022 05:18:05pm
பறவை காய்ச்சல் எதிரொலி-மாநில எல்லையில் மருந்து தெளிப்பு

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பண்ணையில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து வரும் கறிக்கோழி வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via