டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான்- டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி மாா் லென்

by Admin / 18-09-2024 03:51:13pm
டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான்- டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி மாா் லென்

 மது கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லி முதல்வராக கல்வி அமைச்சர் அதிசி மார் லென் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது என்றும் கோப்புகளில் கையெழுத்து இடக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிசி மார்க் லென் 1981 ஜூலை எட்டாம் தேதி டெல்லியில் பிறந்தவர் பஞ்சாப்பை பூர்வீமாகா கொண்டவர். இவர் தந்தை டெல்லி பல்கலைக்கழகத்தில் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பள்ளி கல்லூரிகளில் படித்தவர் பின்பு முதுகலைக்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் படிப்பை முடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் அரசியல் களத்திற்குள் நுழைந்தவர். 2019ல் டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்றத்திற்காக போட்டியிட்டு தோல்வியுற்றார்.. அடுத்து 2020-இல் டெல்லி கல்காஜியில் சட்டமன்ற உறுப்பினராக வென்று அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார் டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிசி மார்க் லென் செய்தியாளர்கள் சந்திப்பில் ,டெல்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் என்று கூறியுள்ளதோடு, இப்பொழுது என் ஒரே இலக்கு. டெல்லி மக்களை காப்பாற்றுவது என்றும் கெஜ்ரிவால் என் மீது வைத்த நம்பிக்கைக்கு உரியவராக இருப்பேன் என்பதோடு அவருடைய வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துவேன் என்று கூறியுள்ளார்..

 

Tags :

Share via