விசிக கொடிவிவகாரம் 97.6 சதவீத வருவாய்த்துறையினர்  போராட்டம்;மாவட்ட ஆட்சியர் அறிக்கை.

by Editor / 11-12-2024 10:12:46pm
விசிக கொடிவிவகாரம் 97.6 சதவீத வருவாய்த்துறையினர்  போராட்டம்;மாவட்ட ஆட்சியர் அறிக்கை.

மதுரை வெளிச்சநத்தத்தில் விசிக கொடி 45அடி உயர்த்தப்பட்ட விவகாரத்தில் வருவாய்த்துறையினர் மீதான பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் மொத்தம் 1609 வருவாய்த்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களில் 35 பேர் அனுமதி பெற்று விடுப்பில் உள்ளதாகவும், இன்று நடைபெற்ற போராட்டத்தில் 1571பேர் கலந்து கொண்டதாகவும், மொத்தமாக 97.6 சதவீத வருவாய்த்துறையினர் பணி செய்யாமல் ஈட்டிய விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை அளித்துள்ளார்.

 

Tags : விசிக கொடிவிவகாரம்

Share via