தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

by Editor / 25-04-2025 11:49:57pm
தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே ராம் அனுமான் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசந்திரன் மகள் மருத்துவர் ஸ்ரீரேகா – மருத்துவர் திவாகர் திருமணம் இன்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு திருமணத்தினை நடத்தி வைத்தார். இதில் மதிமுக முதன்மை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மணமக்களை வாழ்த்தி பேசுகையில் திமுகவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 31 ஆண்டுகள் என 61 ஆண்டுகள் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருக்கிறேன்.

அப்படி நீ என்ன சாதனை செய்தாய் என்று கேட்டால் உலக கோடிஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் , வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. அவர் வீசிய வலையில் சிக்கியவர்கள் பலர், நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை, அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று தலைகீழாக நின்றார். ஆனால் அவரை ஒரு நிமிடம் கூட பார்க்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன், 

விவசாயிகள், மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்ப்பு வந்தது. 

அந்த ஆலையை வைத்து வருமானம் தேடிய லாரி அதிபர்கள் நாமக்கல் அருகே ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையினால் நாமக்கல்காரர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது, உங்கள் சகோதரர்களாகிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி வெளியே அனுப்பியுள்ளோம், 

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு மதிமுகவிற்கு தான் உண்டு, 
நெய்வேலி என்.எல்.சி தனியார்மக்க எதிர்ப்பு, சீமைகருவேல மரங்களை அகற்ற சட்டப்போராட்டம், முல்லை பெரியாறு அணைக்காக 8 ஆண்டுகள் போராட்டம்,நீயூட்ரினோ திட்டம் எதிர்ப்பு என தமிழக மக்களி;ன் வாழ்வாதார பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்.

இப்போது  நாடு பதற்றமான நிலையில் உள்ளது. தேனிலவிற்கு சென்று 4 தம்பதிகள் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். நம்முடைய பிரதமர், கற்பனைக்கு எட்டாத காரியங்களில் ஈடுபட்டு தீவிரவாதிகளை ஒழிப்பேன் என்று பேசி இருக்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பக்கபலமாக ஊறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரே குரலாக தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்று இருக்க வேண்டும்,

தீவிரவாதிகள் சுடுவதற்கு முன்பு இந்துவா, முஸ்லீமா என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, இது ஊடகங்களில் வந்து விட்டது. இஸலாமியார்கள் மீது இந்துகளுக்கு பகை வந்து விடக்கூடாது,  அந்த சம்பவத்தின் போது, காயமடைந்த அனைவரையும், மக்களையும் அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தான் காப்பாற்றி அழைத்து கொண்டு போய் இருக்கின்றனர். அதை நாம் மறந்து விடக்கூடாது. ஏனெனில் நாட்டில் மதத்தின் பெயரால் சண்டை போடக்கூடாது, கலவரம் ஏற்படக்கூடாது, கலவரால் ஏற்பட்டால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள். கோவில் திருவிழாக்கள், பண்டிகையின் போது மதம் பாரமால் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளும் நிலை உள்ளது. அந்த ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும் நம்முடைய கடைமையாகும்,

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தனை பள்ளிகளில் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் நம்முடைய குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக்கொடுங்கள்.பெற்றோரை மதிகின்றவன் தான் மனிதன்,


விவசாயிகள் நொறுங்கி போய் இருக்கிறார்கள், அவர்கள் முதுகெலும்பும் நொறுங்கி போய் உள்ளது.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் அழிந்து போன விவசாய குடும்பங்கள் ஏராளம். நெருக்கடியான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள், தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம், உலகத்தில் உணவு பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயியை தான் எல்லோரும் தேடுவார்கள் என்றார்.

 

Tags : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Share via