யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

by Staff / 12-11-2022 04:16:17pm
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த  வழக்கில்  என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சேலம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பிரிவு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஈடுபட்டபோது நவீன்சக்கரவர்த்தி,சஞ்சய்பிரகாஷ் ஆகிய இருவரிடம் இருந்து இருநாட்டு கைத்துப்பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கி பவுடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.  இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால்  ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டு மீண்டும் வழக்குபதிவு விசாரணை செய்யப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்தி விசாரணையில் இவர்களுடன் கபிலன் என்ற இளைஞரும் உறுதுணையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், மூன்று இளைஞர்கள் உலக தமிழ் நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் குவாரிகள், கிரஷர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வேலை செய்பவர்களை சட்டவிரோத துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதச் செயல்கள் மக்களிடையே அச்சத்தை பரப்பும் என்றும், விடுதலைப் புலிகள் மாதிரியான அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக புத்துயிர் பெற்று வரவேற்புபெரும் என்ற வலுவான செய்தியை பொதுமக்களுக்கும் அரசுக்கும் அனுப்பும் என்றும் மூவரும் எண்ணி உள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

 

Tags :

Share via