குமரி பாதிரியாருக்கு எதிராக பாஜக போராட்டம்

by Editor / 25-07-2021 07:35:01pm
குமரி பாதிரியாருக்கு எதிராக பாஜக போராட்டம்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்டோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர பா.ஜனதா தலைவர் வேம்புராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் ராமராஜா, துணைத்தலைவர் பாலகுருநாதன், செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம், ஒன்றிய தலைவர்கள் முருகன், சரவணன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் தளவாய், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo