தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும்

by Editor / 03-11-2022 06:53:42am
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் தொடர் கனமழை நீடித்து வரும் நிலையில், கனமழை பெய்யும் எனவும், மன்னார் வளைகுடா, தமிழகம், இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்று வீசும் ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேக சூறாவளி காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via