அரிவாள் மனையால் கணவரை வெட்டிக் கொன்ற மனைவி

மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் (36) என்பவர் போதையில் அடிக்கடி அவருடைய மனைவி கனிமொழி (30) மற்றும் பிள்ளைகளை சித்ரவதை செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்றும் போதையில் வீட்டிற்குச் சென்ற கார்த்திக், மனைவியிடம் தகராறு செய்து குழந்தைகளை தாக்கியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த கனிமொழி, அரிவாள் மனையால் அவரை வெட்டியுள்ளார். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :