பணி நேரம் 12 -லிருந்து 8 மணி நேரமாக குறைப்பு

by Admin / 29-01-2022 10:35:52am
பணி நேரம் 12 -லிருந்து 8 மணி நேரமாக குறைப்பு

மாராட்டிய மாநிலத்தில் உள்ள பெண் காவலர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என அம்மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் சஞ்ஜய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின்  பணி நேரம் 12 மணி நேரமாக இருந்து வரும் நிலையில் தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த  வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது.
 
அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories