69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff / 24-02-2025 01:53:37pm
69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற, சாதிவாரி மக்கள் தொகை ஆய்வை நடத்த வேண்டும் என, கும்பகோணம் அருகே நடந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில், வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய - சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் உரையாற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

 

Tags :

Share via