ஃபெஞ்சல் புயல் நிவாரணப்பணி முதல்வர்,துணைமுதல்வர் களமிறங்கினர்.

by Editor / 01-12-2024 01:56:27pm
ஃபெஞ்சல் புயல் நிவாரணப்பணி முதல்வர்,துணைமுதல்வர் களமிறங்கினர்.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அளித்த பேட்டியில், "ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து ஆய்வு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.1) நேரில் செல்ல இருக்கிறார். மேலும், அம்மாவட்டங்களில் அமைச்சர்கள் அதிகாரிகள் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்" என்றார்.இந்த நிலையில்  துணை முதல்வர் உதயநிதி மாமல்லபுரம் முத்தமிழ் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 65 குடும்பங்களை சேர்ந்த 120 பொதுமக்களுக்கு உணவு- அரிசி - போர்வை - பிஸ்கட் அடங்கிய நிவாரணத் தொகுப்பை வழங்கினார்.

 

Tags : ஃபெஞ்சல் புயல் நிவாரணப்பணி முதல்வர்,துணைமுதல்வர் களமிறங்கினர்.

Share via