தமிழ் மீது பாஜக கொண்ட வெறுப்பு வெட்ட வெளிச்சமானது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்குத் தமிழ் மேல் உள்ள வெறுப்பு தெளிவாக வெளிப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா! வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறை சுயாட்சி மீதான நேரடி தாக்குதல். கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக அரசு, சட்டத்துறையை அமைப்பு ரீதியாக சிதைத்துவருகிறது. முதலில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) மூலம், நீதித்துறை நியமனங்களை அபகரிக்கவும், பிறகு நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரித்தது.
Tags :