தமிழக அரசு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
தமிழக அரசு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ,கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து அரசியல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை வரைவு செய்வதற்காக,அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் 'ரோடு ஷோ'க்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது..கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் பாதுகாப்பு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது .இந்தக் கூட்டத்தில், பொதுக்கூட்டங்களுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெறுவது, கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிப்பது போன்ற புதிய பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது . இக்கூட்டம் மூத்தஅமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில்.நடந்தது. .தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
Tags :



















