நண்பனின் கள்ளக்காதலுக்கு உதவியாக இருந்த நபர் வெட்டி படுகொலை - மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள காசியாபுரம் என்கின்ற கிராமத்தில் வசித்து வந்த செவத்தலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவரது மனைவியான பார்வதி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு செவத்தலிங்கத்தின் நண்பரான சேகர் என்பவர் உதவியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தெரிந்து கொண்ட பார்வதியின் கணவரான ஒல்லியான் என்ற லிங்கம் ஆவேசம் அடைந்து அவரது நண்பர்களான வைத்தியலிங்கம், குமார் ஆகிய 3 பேரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, செவத்தலிங்கத்தின் கள்ளக்காதலுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரான சேகர் என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒல்லியான் என்ற லிங்கம், வைத்தியலிங்கம், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவு பெற்று இன்றைய தினம் தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பின்படி சேகரை வெட்டி படுகொலை செய்த மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Tags : நண்பனின் கள்ளக்காதலுக்கு உதவியாக இருந்த நபர் வெட்டி படுகொலை - மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.