மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன் கைது.

by Editor / 25-05-2023 09:16:56pm
மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன் கைது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முக்கூடல், ஹரிராம் தெருவை சேர்ந்த செல்லதுரை(73) என்பவர் முக்கூடல், மங்கம்மாள் சாலை அருகே பன்றி பண்ணை வைத்து அங்கு தங்கி வந்துள்ளார். நேற்று 24.05.2023 ஆன் தேதி அன்று செல்லதுரையின் மூத்த மகனான முருகானந்தம் என்பவர் பன்றி பண்ணைக்கு வந்து பார்த்தபோது செல்லதுரை மயங்கிய நிலையில் கழுத்தை நெரித்த அடையாளத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முருகானந்தம் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சேரன்மகாதேவி வட்ட காவல் ஆய்வாளர் சேக் அப்துல் காதர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்து போன செல்லதுரையின் மூன்றாவது மனைவியின் மகளின் கணவரான பாலகிருஷ்ணன்(32) என்பவர் செல்லதுரை வைத்திருந்த பணத்தை கைப்பற்றும் எண்ணத்தில் கயிரால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளி  பாலகிருஷ்ணனை  சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சேக் அப்துல் காதர் 
கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றார்.

 

Tags :

Share via

More stories