நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் - ரசிகர்கள் அஜித் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம்

நடிகர் அஜித்குமார்,இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிக்கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்துஇதே கூட்டணி இணைந்து வலிமை திரைப்படம் தொடங்கப்பட்டது. படம் முடிவடைந்தாலும் கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள் அரசியல்வாதிகள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை என வலிமை அப்டேட் கேட்டு பரப்பரப்பினை ஏற்படுத்தினர். இதையெடுத்து வலிமை மோசன் போஸ்டர், டிரைலர், பாடல்கள் என அடுத்தடுத்து வலிமை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வந்தனர். இதனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் தைப்பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஓமைக்காரன் தொற்று காரணமாக பட வெளியீடு தள்ளிப்போன நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகும் அன்று அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தது மட்டுமின்றி, அதற்கான டிக்கெட்களை புக் செய்து அசத்தினர். மேலும் நேற்றிரவு முதல் வலிமை திரைப்படத்தினை காண ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று அதிகாலை 4மணிக்கு வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கோவில்பட்டி சத்தியாபாமா சினிமாஸ் ( 2 ஸ்கீரின்), லெட்சுமி (2ஸ்கீரின் ) மற்றும் சண்முகா என் 3 திரையரங்குகளில் வெளியானது. இதையெடுத்து ரசிகர்கள் ஒவ்வொரு திரையரங்கு முன்பும் பட்டாசு வெடித்தும், மேள தள முழங்க கொண்;டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.

Tags : Actor Ajith Valimai Release - Fans bless Ajith cut out