அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூரை நோக்கி அரசு பேருந்து சுமார் 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை ராஜபாளையம் சத்திரப்பட்டி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பாலு மகன் கணேசன் வயது 55 ஓட்டி வந்துள்ளார். பேருந்து அகரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் வீசி பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் . இதில் பேருந்தில் உள்ள முன்பக்க கண்ணாடி முழுமையாக நொறுங்கியது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் பாலு ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் ஏரல் போலீசார் கல் வீசி பேருந்து கண்ணாடியை உடைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags : அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.