தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு

by Admin / 23-01-2024 11:52:58am
தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு

நிதிநிறுவங்களில் ஊழியர்கள் அவறுதூறாக பேசுவதாக குற்றச்சாட்டுதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் விடும் பெண்கள்....தூத்துக்குடி மாவட்டம் கூசாலிபட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.இவரது மனைவி பார்வதி. இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்து வருகிறார். மேலும் மாவு, ஜவுளி வியாபாரம், தீபவாளி பண்டு சீட், சீட் ஆகியவற்றை பிடித்து வந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி; அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூசாலிபட்டி பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. வெங்கடேஷிடம், கூசாலிபட்டியை சேர்ந்த பார்வதி, தங்களை ஏமாற்றி தங்களது பெயரில் தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தினை கடனை வாங்கி விட்டு தலைமறைவாகி விட்டதாகவும், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தங்களிடம் பணத்தினை கேட்டு தொந்தரவு செய்து வருவதாகவும், தங்களை ஏமாற்றி தலைமறைவாக இருக்கும் பார்வதியிடம் விசாரணை நடத்தி தங்களது பணத்தினை பெற்று தருமாறு புகார் அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி.வெங்கடேசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.இது குறித்து மனு கொடுக்க வந்த பெண்கள் கூறுகையில் பார்வதியை ஜவுளி, மாவு வியாபாரம், சிட் பிடித்த காரணத்தினாலும், நல்ல பழக்கம் என்பதாலும், அவரை நம்பி தனியார் நிதி நிறுவனங்களில் தங்களது ஆதாரங்களை கொடுத்து, பணம் பெற்று கொடுத்தாகவும், சில மாதங்கள் பணத்தினை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பார்வதி செலுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாக செலுத்தவில்லை என்பதால், தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களை பணத்தினை செலுத்த வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இது குறித்து பார்வதியிடம் கேட்க சென்ற போது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவர் வீட்டில் இல்லை என்றும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சரியான பதில் கூறவில்லை

, தங்களுக்கும் பார்வதிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவது மட்டுமின்றி, இங்கு வரக்கூடாது என்று துரத்திவிடுவதாக கூறினர். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், தங்களை ஏமாற்றி தனியார் நிதி நிறுவனங்களில் தங்கள் பெயரில் கடனை பெற்று விட்டு பார்வதி தலைமறைவாகி விட்டதால் தற்பொழுது தங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், மேலும் கணவருக்கு தெரியமால் பார்வதிக்கு உதவி செய்து சிக்கலில் இருப்பதால் தங்களது குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

சிலர் என்ன தனியார் நிதி நிறுவனம், என்ன கடன் என்று தெரிந்து பார்வதிக்கு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், சிலர் என்ன நிதி நிறுவனம், என்ன கடன் என்று கூட தெரியமால் பணத்தினை வாங்கி கொடுத்துள்ளனர்.

கிராம சக்தி, எக்விடாஸ், சம்ஸ்தா குழு, மகாசேமம், முத்தூட் பைனான்ஸ், கிராம விடியல், மணி பாய்ண்ட், அட்சயா, எல்.டி.டி, மதுரா பைனான்ஸ், சத்யா குழு பைனான்ஸ், ஆக்சிஸ் வாங்கி என 12 தனியார் நிதிநிறுவனங்களில் தனி நபர் லோன், மாட்டு லோன் என பல்வேறு கடன்கள் வாங்கியுள்ளனர்.

ஒவ்வொரு பெயரிலும் 1 முதல் 3 லோன்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தினை பெற்று பார்வதி மோசடி செய்துள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்;. பார்வதி மீது புகார் கூறியவர்களில் அவர்களது உறவினர்கள் சிலரும் உள்ளனர் என்பது குறிப்படதக்கது.

பெண்கள் கூறுவது உண்மையா ?  என்பது போலீசார் முழுமையாக விசாரணை நடத்திய பின்னர் தான் தெரிய வரும்...

தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு
 

Tags :

Share via