திமுக அரசைக் கண்டித்துஆக:24-ம் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

by Editor / 20-08-2024 11:43:20pm
 திமுக அரசைக் கண்டித்துஆக:24-ம் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

மதுரையில் ஆகஸ்ட் 24-ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில், மதுரையில் ஆகஸ்ட் 24-ம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திமுக அரசைக் கண்டித்து

Share via

More stories