சேது சமுத்திர திட்டத்திற்கு தீர்மானம்

by Staff / 12-01-2023 11:53:04am
சேது சமுத்திர திட்டத்திற்கு தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழிகிறார். 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். இனியும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories