இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் (84) வயது மூப்பு காரணமாக இன்று (ஏப்.25) காலமானார். இவர், 1994ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். மேலும் இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகளையும் கஸ்தூரிரங்கன் பெற்றுள்ளார்.
Tags :