தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற 15 வயது மகள்

சத்தீஸ்கர்: ஜஷ்பூர் மாவட்டம் பாக்பஹாரை சேர்ந்த 50 வயது நபர் தனது வீட்டில் கோடரியால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். அந்த நபரின் 15 வயது மகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அச்சிறுமி, "தந்தை தினமும் மது போதையில் என்னையும், தாயாரையும் அடித்து துன்புறுத்துவார். சம்பவத்தன்று குடிபோதையில் வீடு திரும்பிய தந்தை என்னை அடித்தார். கோபத்தில், வீட்டில் இருந்த கோடரியால் தந்தையின் தலையில் தாக்கி கொன்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி கைது செய்யப்பட்டார்.
Tags :