நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய அவகாசம் கொடுத்த நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில், தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி. சேகர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார். அதில், இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தான் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளிடம் மன்னிப்பு கூறிவிட்டேன். எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் எஸ்.வி. சேகர் சரணடையவதற்கான காலத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளது.
Tags :