தமிழக வெற்றிக்காக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

by Admin / 19-02-2026 10:18:00pm
தமிழக வெற்றிக்காக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி  பிப்ரவரி 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக்காக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வேலூர் அகரம் சேரி பகுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்காக 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சந்திப்பு நிகழ்வில் சுமார் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளன. இச்சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறை 20 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து உள்ளது.. பங்கேற்க உள்ள நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் குறியீடு அடங்கிய புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளன. ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என தாவீக்கா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் கூரை அமைக்கப்பட்டுள்ளது. வருகிறவர்களுக்கு குடிநீர் மற்றும் பாத்ரூம் வசதியோடு மருத்துவ உதவிக்காக 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.  இதற்கான பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தத்தில் உள்ளூர் நிர்வாகிகளோடு சிறப்பு நடைபெற்றது.

 

Tags :

Share via
Logo