கார் மோதி ஊர்க் காவல் படை வீரர் பலி
கோவை, பீளமேட்டில் அடையாளம் தெரியாத கார் மோதி ஊர்க் காவல் படை வீரர் உயிரிழப்பு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகாயம் அடைந்தார்.கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு ஊர்க் காவல் படை வீரர். இவர் நள்ளிரவு 2 மணியளவில் கோவை பீளமேடு காவல் உதவி ஆய்வாளர் ரவி என்பவருடன் ஸ்கூட்டரில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அவிநாசி சாலையில் கொடிசியா அருகே செல்லும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
Tags :