2,500 சிறுபான்மையின மகளிருக்கு தையல் இயந்திரங்கள்

ரூ.1.60 கோடியில் 2,500 சிறுபான்மையின மகளிருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கையில் பேசிய அவர், சிறுபான்மையின மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் குழுக்கள் அமைத்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தேவையான பயிற்சி அளித்து, மின்மோட்டாருடன் கூடிய ஒரு தையல் இயந்திரம் ரூ.6,400 மதிப்பில் 2,500 மகளிருக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
Tags :