மம்தா பானர்ஜி பட்ஜெட்டை "மக்களுக்கான பட்ஜெட்" என்று வர்ணித்துள்ளாா்.

by Admin / 07-02-2026 01:43:48am
மம்தா பானர்ஜி  பட்ஜெட்டை

மேற்கு வங்கத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 4.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. லட்சுமீர் பண்டார்' (Lakshmir Bhandar) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுப்பிரிவு பெண்களுக்கு ₹1,500-ம், பட்டியலினபெண்களுக்கு ₹1,700-ம் பிப்ரவரி 2026 முதல் வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு (21 முதல் 40 வயது வரை) மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 15, 2026 முதல் செயல்பாட்டுக்கு வரும். அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் சிவில் வாலண்டியர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கூடுதலாக 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை "மக்களுக்கான பட்ஜெட்" என்று வர்ணித்த நிலையில், எதிர்க்கட்சியான பா.ஜ.க இது தேர்தலை முன்னிட்டு அளிக்கப்பட்ட "நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்" என்று விமர்சித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo