நடிகர் ராஜேஷின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: பார்த்திபன்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமான அவர் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜேஷ் மறைவு குறித்து பேசிய நடிகர் பார்த்திபன், "அவரின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பன்முக கலைஞரான அவர் திரைத்துறை வளர்ச்சிப் பற்றி சிந்தித்தவர்" என்றார்.
Tags :