நடிகர் ராஜேஷ் மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக 150 படங்களில் நடித்து, பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர் ராஜேஷ். அவரது நீண்ட அனுபவத்தை கருத்தில்கொண்டு, 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமித்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags :