முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனாதிபதி, பிரதமரை நேரில் சந்திக்கிறார்.

by Editor / 17-08-2022 01:37:16pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜனாதிபதி, பிரதமரை நேரில் சந்திக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். பின் காலை 11.30 மணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி கூறுகிறார். மேலும் தமிழக நலன் சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவதும், அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனுவையும் பிரதமரிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னரிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை. நீட் விலக்கு சட்ட மசோதாவும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் எடுத்துரைப்பார். எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பின் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

 

Tags :

Share via