மனதை மயங்க வைக்கும் மல்லிகை விலை இன்று கிறங்க வைக்குது.

by Editor / 05-12-2022 02:54:40pm
மனதை மயங்க வைக்கும் மல்லிகை விலை இன்று கிறங்க வைக்குது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவனி மலர் சந்தையில்  பூக்கள் விலை இரு மடங்கு.உயர்வு: ஒரு கிலோ மல்லிகை பூ 2500 ரூபாய்க்கு விற்பனை.மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த வாரம்  1000 ரூபாய் வரை  விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 600 - 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த  பிச்சி பூ ரூ.1500 க்கும்,800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த முல்லை பூ ரூ.1500 க்கும்சம்பங்கி ரூ.150க்கும், பட்டன்ரோஸ் ரூ.250க்கும்  செவ்வந்தி ரூ.150, விற்பனையாகி வருகின்றன.

 

Tags :

Share via