வெயிலின் தாக்கம்: உருகிய ஆபிராகம் லிங்கன் சிலை

by Staff / 26-06-2024 01:22:22pm
வெயிலின் தாக்கம்: உருகிய ஆபிராகம் லிங்கன் சிலை

உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவையும் வெயில் விட்டு வைக்கவில்லை. 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகத் தொடங்கியுள்ளது. வாஷிங்டனில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த அவரின் சிலை உருகி தலை தொங்கியதால், தலையை மட்டும் கழற்றி விட்டு, உடல் சிலையை மட்டும் வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via