ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது - பேனர் வைத்த விவசாயிகள்

திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். ஆனால், பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதனைக் கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி ‘ஓட்டு கேட்டு அரசியல்வாதிகள் ஊருக்குள் வரக்கூடாது’ என பேனர் வைத்துள்ளனர்.
Tags :